< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் உள்ளனர்- திண்டுக்கல் லியோனி பேச்சு
மாநில செய்திகள்

அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் உள்ளனர்- திண்டுக்கல் லியோனி பேச்சு

தினத்தந்தி
|
9 Feb 2023 9:47 PM IST

ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கு செல்வது எனத்தெரியாமல் உள்ளதாக திண்டுக்கல் லியோனி பேசினார்.

ஈரோடு,

ஈரோடு கிழக்கு தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை ஆதரித்து தமிழக செய்தி மக்கள் தொடர்புதுறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், தி.மு.க. கொள்கை விளக்க அணி செயலாளர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் கள்ளுக்கடை மேடு, முனிசிபல்காலனி ஆகிய இடங்களில் பிரசாரம் மேற்கொண்டனர். பின்னர் திண்டுக்கல் லியோனி பேசும்போது கூறியதாவது:-

அ.தி.மு.க. என்ற கட்சியின் செயல்பாடு இன்று கோர்ட்டில் தான் நடந்து கொண்டுள்ளது. ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் அ.தி.மு.க. தொண்டர்கள் எங்கு செல்வது என்று தெரியாமல் பரிதாப நிலையில் உள்ளனர். தி.மு.க.வை நோக்கி மெல்ல வரத்தொடங்கிவிட்டனர்" என்றார்.

மேலும் செய்திகள்