திருநெல்வேலி
அ.தி.மு.க. கவுன்சிலர் தி.மு.க.வில் இணைந்தார்
|திசையன்விளை பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர் தி.மு.க.வில் இணைந்தார்.
திசையன்விளை:
நெல்லை மாவட்டம் திசையன்விளை பேரூராட்சி 7-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் ஆறுமுகம் தேவி, 6-வது வார்டு அ.தி.மு.க செயலாளர் லிங்கராஜா ஆகிய இருவரும் நேற்று அ.தி.மு.க.வில் இருந்து விலகி நெல்லை கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் இரா.ஆவுடையப்பன் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
நிகழ்ச்சியில் தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் இரா.ஆ.பிரபாகரன், வக்கீல் அணி துணை செயலாளர் செல்வ சூடாமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் ஜான் ரபீந்தர், துணை அமைப்பாளர் முருகன், மாவட்ட மகளிர் அணி தலைவி கமலா நேரு, தி.மு.க. நிர்வாகி லயன்ஸ் சுயம்பு ராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திசையன்விளை பேரூராட்சியில் ஏற்கனவே 2 சுயேச்சை கவுன்சிலர்கள் தி.மு.க.வில் இணைந்துள்ள நிலையில் தற்போது அ.தி.மு.க கவுன்சிலர் ஆறுமுக தேவியும் தி.மு.க.வில் இணைந்துள்ளதால் அக்கட்சியின் பலம் அதிகரித்து உள்ளது. இதுதவிர காங்கிரஸ், பாரதீய ஜனதா மற்றும் ஒரு சுயேச்சை கவுன்சிலர் தி.மு.க.வுக்கு ஆதரவு தெரிவிப்பதால் திசையன்விளை பேரூராட்சியை தி.மு.க. கைப்பற்றும் நடவடிக்கையில் இறங்கி உள்ளது. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.