< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம்
|10 Oct 2023 12:15 AM IST
தலைஞாயிறில் அ.தி.மு.க. தெருமுனை பிரசார கூட்டம் நடந்தது.
வாய்மேடு:
தி.மு.க. அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தலைஞாயிறில் அ.தி.மு.க. சார்பில் தெருமுனை பிரசாரம் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்துக்கு மாவட்ட பொருளாளர் சண்முகராசு, ஒன்றிய செயலாளர்கள், பேரூர் செயலாளர் பிச்சையன், அவை.பாலசுப்பிரமணியன், சவுரிராஜன், மாவட்ட கவுன்சிலர் இளவரசி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் எம்.எல்.ஏ. பேசியதாவது:- நாகை, வேதாரண்யம், தலைஞாயிறு அரசு தலைமை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் பணியிடம் பற்றாக்குறையாக உள்ளது. தலைஞாயிறு ஒன்றியத்தில் உள்ள 24 ஊராட்சிகளில் குடிநீர் பற்றாக்குறை நிலவுகிறது. இவ்வாறு பேசினார். இதில் வேதாரண்யம் ஒன்றிய செயலாளர் கிரிதரன், நாகை நகரச் செயலாளர் தங்க கதிரவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.