< Back
மாநில செய்திகள்
ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம்
மாநில செய்திகள்

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக அ.தி.மு.க. எடப்பாடி பழனிசாமி பதில் கடிதம்

தினத்தந்தி
|
14 Jan 2023 11:13 AM IST

ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் அனுப்பி உள்ளது.

சென்னை

நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தும் வகையிலான 'ஒரே நாடு ஒரே தேர்தலை' செயல்படுத்துவதில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

இது தொடர்பாக ஆய்வு செய்யுமாறு தேசிய சட்ட ஆணையத்தை, மத்திய சட்ட அமைச்சகம் கேட்டுக்கொண்டது. இந்த விவகாரத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர்களிடம் கருத்து கேட்டு, அவர்களது நம்பிக்கையை வெளிப்படுத்தும் வகையில் முக்கிய சட்ட திருத்தத்தை சட்ட ஆணையம் கொண்டு வர உள்ளது.

நாடாளுமன்றத்துக்கும், சட்டமன்றத்துக்கும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவது என்பது பொதுமக்களுக்கும், அரசியல் கட்சிகளுக்கும்தான் தாக்கத்தை ஏற்படுத்தும். எனவே சட்ட ஆணையம் பொதுமக்களிடமும், அரசியல் கட்சிகளிடமும்தான் இதுதொடர்பான கருத்துகளை கோர விரும்புகிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக அ.தி.மு.க.வின் கருத்துகளை கேட்கும் வகையில் சட்ட ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது. சட்ட ஆணையத்தின் தலைவரும், நீதிபதியுமான ரிது ராஜ் அவஸ்தி, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி என்று குறிப்பிட்டு கருத்து கேட்கும் பொது நோட்டீஸ் அனுப்பி இருந்தது.

இதுதொடர்பான கருத்துகளை ஜனவரி 16-ந் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. ஆன்லைன் முறையில் 30 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தலுக்கு ஆதரவு அளிப்பதாக அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இந்திய சட்ட ஆணையத்திற்கு பதில் அனுப்பி உள்ளார்.

மேலும் செய்திகள்