< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்: சசிகலா மேல்முறையீட்டு மனு 23-ந் தேதி விசாரணை
மாநில செய்திகள்

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்: சசிகலா மேல்முறையீட்டு மனு 23-ந் தேதி விசாரணை

தினத்தந்தி
|
21 March 2023 4:58 AM IST

அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கம்: சசிகலா மேல்முறையீட்டு மனு 23-ந் தேதி விசாரணை -ஐகோர்ட்டு உத்தரவு.

சென்னை,

முதல்-அமைச்சர் ஜெயலலிதா மறைவுக்குப்பிறகு அ.தி.மு.க. பொதுச்செயலாளராக சசிகலாவும், துணை பொதுச்செயலாளராக டி.டி.வி.தினகரனும் நியமிக்கப்பட்டனர். சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா சிறைக்கு சென்ற பிறகு கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் நடைபெற்ற கட்சி பொதுக்குழுக்கூட்டத்தில் சசிகலா மற்றும் தினகரன் ஆகியோர் கட்சியில் இருந்து நீக்கி தீர்மானம் இயற்றப்பட்டன.

தன்னை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியதை எதிர்த்து சசிகலா, சென்னை சிட்டி சிவில் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை நிராகரிக்கக்கோரி ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் பதில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை ஏற்று, சசிகலாவின் வழக்கு நிராகரிக்கப்பட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் சசிகலா மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கின் மதிப்புக்கு ஏற்ப கோர்ட்டு கட்டணம் செலுத்தவில்லை என்பதால் சசிகலா தொடர்ந்துள்ள இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனக்கூறி அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரான செம்மலை பதில் மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், சசிகலாவின் மேல்முறையீட்டு வழக்கை விசாரணைக்கு பட்டியலிடக்கோரி, ஐகோர்ட்டு நீதிபதி டி.வி.தமிழ்ச்செல்வியிடம், சசிகலாவின் தரப்பு மூத்த வக்கீல் ஜி.ராஜகோபாலன் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிபதி, இந்த வழக்கை 23-ந்தேதி விசாரிப்பதாக கூறினார்.

மேலும் செய்திகள்