< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
15 Dec 2022 1:55 PM IST

செங்கல்பட்டு, காஞ்சீபுரம் மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் வண்டலூர் தாலுகா அலுவலகம் கூடுவாஞ்சேரியில் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், சொத்துவரி உயர்வு, மின் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்ற விலைவாசி உயர்வுகளை கண்டித்தும் வண்டலூரை சுற்றியுள்ள ஊராட்சிகளை இணைத்து வண்டலூரை புதிய நகராட்சியாக அறிவித்திட கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் வண்டலூர் தாலுகா அலுவலகம் எதிரே நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளரும், செங்கல்பட்டு மாவட்ட கவுன்சிலருமான எம்.கஜா என்கிற கஜேந்திரன் தலைமை தாங்கினார். ஒன்றிய நிர்வாகிகள் லட்சுமணன், சண்முகம், கனி என்கிற கணேஷ், ஒட்டேரி ரபீக், ரங்கன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லபாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் சின்னையா ஆகியோர் கலந்து கொண்டு தமிழக அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார்கள். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் தமிழக அரசையும், தி.மு.க.வையும் கண்டித்து பல்வேறு கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதில் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஹரிகிருஷ்ணன், ரவி, சாந்தி புருஷோத்தமன் மற்றும் காட்டாங்கொளத்தூர் வடக்கு ஒன்றிய அ.தி.மு.க. நிர்வாகிகள், கிளை நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவில் பஜார் வீதியில் காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் சொத்து வரி உயர்வு, மின்கட்டண உயர்வு, பால் விலை உயர்வு போன்றவற்றை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

இதற்கு காட்டாங்கொளத்தூர் மேற்கு ஒன்றிய செயலாளர் குணசேகரன் தலைமை தாங்கினார், முன்னாள் ஒன்றிய குழுதலைவர் பொன்னுசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் சிவகுமார், பாஷா முன்னிலை வகித்தனர். ஒன்றிய துணை செயலாளர் வடகால் மாரி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் அமைச்சர் வளர்மதி, மேற்கு மாவட்ட செயலாளர் சிட்லப்பாக்கம் ராஜேந்திரன், முன்னாள் அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் வெங்கிடாபுரம் சத்தியநாராயணன், வக்கீல்கள் கண்ணன், சுதேஷ்ஆனந்த், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் குமரன், ரவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் தனபால் தலைமையில் செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ் ஆறுமுகம் முன்னிலை வகித்தார். மாவட்ட அவைத்தலைவர் தனபால், மாவட்ட செயலாளர் திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், ஒன்றிய செயலாளர்கள் விஜய ரங்கன் , ரைஸ்மில் செல்வம், மாமல்லபுரம் ராகவன், மாவட்ட மீனவரணி செயலாளர் கவிஞர் கலியபெருமாள், புதுப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் காயத்ரி தனபால் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

முடிவில் திருக்கழுக்குன்றம் பேரூராட்சி செயலாளர் தினேஷ்குமார் நன்றி கூறினார். பின்னர் விலைவாசி உயர்வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டது.

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பஸ் நிலையம் அருகே ஸ்ரீபெரும்புதூர் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பழனி தலைமையில் ஆரப்பாட்டம் நடைபெற்றது. அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் எழிச்சூர் ராமச்சந்திரன், குன்றத்தூர் ஒன்றிய அ.தி.மு.க. துணை செயலாளர் ஒரத்தூர் என். டி. சுந்தர், மாவட்ட அ.தி.மு.க. பிரதிநிதி படப்பை மாரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்பாட்டத்தில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் காவனூர் கே.எல். வெங்கடேசன், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ஆதனூர் கோபால் ராஜ் என்கிற சசிகுமார், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற துணைச் செயலாளர் சென்னகுப்பம் பாண்டியன், மற்றும் மாவட்ட, ஒன்றிய நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

காஞ்சீபுரம் அருகே சிறுகாவேரிபாக்கத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு காஞ்சீபுரம் ஒன்றிய அ.தி.மு.க. செயலாளர்கள் தும்பவனம் டி.ஜீவானந்தம், களக்காட்டூர் ராஜி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான வி.சோமசுந்தரம் தலைமை வகித்து பேசினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில், அ.தி.மு.க. அமைப்பு செயலாளர்கள் வாலாஜாபாத் பா.கணேசன், மைதிலி திருநாவுக்கரசு, அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற நிர்வாகி காஞ்சி பன்னீர்செல்வம், பகுதி செயலாளரும், பெரிய காஞ்சீபுரம் நகர கூட்டுறவு வங்கி தலைவருமான பாலாஜி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

உத்திரமேரூர் பஸ் நிலையம் அருகே நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு காஞ்சீபுரம் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, வி. சோமசுந்தரம் தலைமை தாங்கினார். மாவட்ட அவைத்தலைவர் குன்னவாக்கம் கிருஷ்ணமூர்த்தி, அமைப்பு செயலாளர் வாலாஜாபாத் பா. கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான சோமசுந்தரம் தமிழக அரசை கண்டித்து பேசினார். ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்.பி. காஞ்சி பன்னீர்செல்வம் மற்றும் திரளானோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்