திருச்சி
கல்லக்குடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
|கல்லக்குடியில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்
மின்சாரம், பால் விலை, குடிநீர் கட்டணம் மற்றும் சொத்துவரி உயர்வை கண்டித்து கல்லக்குடி பேரூராட்சி அ.தி.மு.க. சார்பில் பஸ் நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்திற்கு கல்லக்குடி நகரசெயலாளர் பிச்சைபிள்ளை தலைமை தாங்கினார். புள்ளம்பாடி வடக்கு ஒன்றிய செயலாளர் ராஜாராம், திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட அவைத்தலைவர் அருணகிரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் கண்டன உரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள், வடக்கு ஒன்றிய, நகர, கிளைகழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதேபோல் புள்ளம்பாடியில் தெற்கு ஒன்றியசெயலாளர் டிஎன்.சிவக்குமார் முன்னிலையில் நகரசெயலாளர் ஜேக்கப்அருள்ராஜ் தலைமையில் காமராஜர் சிலை முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.