< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அ.தி.மு.க. நகர செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு
|24 Sept 2024 7:40 AM IST
மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
தேனி,
தேனி மாவட்டம் சின்னமனூர் அ.தி.மு.க. நகர செயலாளர் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் அ.தி.மு.க. நகர செயலாளர் பிச்சைக்கனி வீடு மீது மர்ம நபர்கள் நள்ளிரவில் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், போடி உட்கோட்ட காவல்துறை துணை கண்காணிப்பாளர் தலைமையில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.