< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
அரியலூர்
மாநில செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தினத்தந்தி
|
13 April 2023 11:44 PM IST

அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி- அரியலூர் சாலையில் உள்ள பஸ் நிறுத்தத்தில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. இதற்கு மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கி, தண்ணீர் பந்தலை திறந்து வைத்து நீர்மோர், பானகம், வெள்ளரி பிஞ்சு, தர்பூசணி, இளநீர் மற்றும் கரும்பு சாறு ஆகியவற்றை பொதுமக்களுக்கு வழங்கினார். தெற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்பரமணியன் அனைவரையும் வரவேற்றார். இதில் அ.தி.மு.க. மாவட்ட கவுன்சிலர் அன்பழகன், ஒன்றிய கவுன்சிலர் சுந்தரவடிவேல், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சிவசங்கர், மாவட்ட தெற்கு ஒன்றிய துணை தலைவர் கு.க.சங்கர் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்