< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல்
கடலூர்
மாநில செய்திகள்

அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல்

தினத்தந்தி
|
17 April 2023 12:46 AM IST

பரங்கிப்பேட்டை, சிதம்பரத்தில் அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்தார்.

பரங்கிப்பேட்டை,

நீர், மோர் பந்தல்

கடலூர் கிழக்கு மாவட்டம் பரங்கிப்பேட்டை பெரிய தெருவில் அ.தி.மு.க. சார்பில் கோடைகால நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நடந்தது. விழாவுக்கு பரங்கிப்பேட்டை கூட்டுறவு வங்கி தலைவர் வசந்த் தலைமை தாங்கினார்.

முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், மாவட்ட அவைத் தலைவர் எம்.எஸ்.என். குமார், மேற்கு ஒன்றிய செயலாளர் ராசாங்கம், கிழக்கு ஒன்றிய செயலாளர் அசோகன், மாவட்ட இணை செயலாளர் ரெங்கம்மாள், மாவட்ட துணை செயலாளர் செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் மாரிமுத்து வரவேற்றார்.

திறப்பு

சிறப்பு அழைப்பாளராக கடலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே.ஏ.பாண்டியன் கலந்து கொண்டு கோடைகால நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி. வெள்ளரிப்பிஞ்சு போன்றவற்றை வழங்கினார்.

இதில் ஒன்றிய அவை தலைவர் பேராசிரியர் ரங்கசாமி, ஒன்றிய கவுன்சிலர்கள் ஆனந்தஜோதி சுதாகர், புதுப்பேட்டை ரவி, நகர செயலாளர் கிள்ளை தமிழரசன், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளர் வீராசாமி, அவை தலைவர் மலைமோகன், நிர்வாகிகள் கார்த்திகேயன், வளையல் ரவி, பேரூராட்சி மன்ற கவுன்சிலர் ஜெயந்தி ஜெய்சங்கர், நகர இளைஞரணி செயலாளர் சங்கர், ஜெயலலிதா பேரவை நிர்வாகி சந்தர் ராமஜெயம், இக்பால், சம்பந்தம் உள்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்

சிதம்பரம் காந்தி சிலை அருகே நகர அ.தி.மு.க. சார்பில் அமைக்கப்பட்ட நீர் மோர் பந்தலை மாவட்ட செயலாளர் கே.ஏ.பாண்டியன் எம்.எல்.ஏ. திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, வெள்ளரி போன்றவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் அமைச்சர் செல்வி ராமஜெயம், முன்னாள் எம்.எல்.ஏ. அருள், நகர செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணை செயலாளர் ஹரி சக்தி அனைவரையும் வரவேற்றார். இதில் நிர்வாகிகள் எம்.எஸ்.என்.குமார், தோப்பு சுந்தர், டேங்க் சண்முகம், தில்லை கோபி, ரங்கம்மாள், தேன்மொழி, ஒன்றிய செயலாளர்கள் ராஜாங்கம், சுந்தரமூர்த்தி, நிர்வாகி மருதுவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்