விழுப்புரம்
அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தல்
|விழுப்புரம் 23-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் நீர், மோர் பந்தலை சி.வி.சண்முகம் எம்.பி. திறந்து வைத்தார்.
விழுப்புரம்:
விழுப்புரம் நகராட்சி 23-வது வார்டு பகுதியில் அ.தி.மு.க. சார்பில், கோடை வெப்பத்தை தணிக்கும் வகையில் பொதுமக்களின் வசதிக்காக விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகில் நீர், மோர் பந்தல் அமைக்கப்பட்டது. இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு விழுப்புரம் தெற்கு நகர பொருளாளரும், நகரமன்ற கவுன்சிலருமான கோதண்டராமன் தலைமை தாங்கினார். நகர செயலாளர்கள் பசுபதி, ராமதாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட்ட செயலாளர் சி.வி.சண்முகம் எம்.பி. கலந்துகொண்டு நீர், மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, நீர், மோர், குளிர்பானங்கள் ஆகியவற்றை வழங்கினார். இவ்விழாவில் ஒன்றிய செயலாளர்கள் பேட்டை முருகன், ராஜா, எசாலம்பன்னீர், மாவட்ட ஜெயலலிதா பேரவை இணை செயலாளர் செங்குட்டுவன், நகர எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் பிரஸ்குமரன், நகர பாசறை செயலாளர் கிருஷ்ணன், நகரமன்ற கவுன்சிலர்கள் கோல்டுசேகர், கலை, வார்டு செயலாளர் குப்புசாமி, முன்னாள் கவுன்சிலர்கள் விஜயகுமார், ராதாகிருஷ்ணன், வார்டு நிர்வாகிகள் பாலமுருகன், தங்கசண்முகம், முனியப்பன், குமார், அங்கப்பன் உள்பட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை மாவட்ட பாசறை தலைவர் பூந்தோட்டம் கே.பி.அன்பு, துணைத்தலைவர் வக்கீல் கலையரசன் ஆகியோர் செய்திருந்தனர்.