< Back
மாநில செய்திகள்
பாலமேடு அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை:6 பேர், மதுரை கோர்ட்டில் சரண்
மதுரை
மாநில செய்திகள்

பாலமேடு அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் கொலை:6 பேர், மதுரை கோர்ட்டில் சரண்

தினத்தந்தி
|
19 July 2023 2:35 AM IST

பாலமேடு அருகே அ.தி.மு.க. கவுன்சிலர் கொலையில் 6 பேர், மதுரை கோர்ட்டில் சரணடைந்தனர்.


திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா மாவுத்தன்பட்டியைச் சேர்ந்தவர் சந்திரபாண்டியன் (வயது 45). இவர் அம்மையநாயக்கனூர் பேரூராட்சி அ.தி.மு.க. கவுன்சிலர். நேற்று முன்தினம் மதுரை மாவட்டம் பாலமேடு அருகே உள்ள மாணிக்கம்பட்டி பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்றார். அப்போது ஒரு கும்பல் அவரை வழிமறித்து, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்தது. அவரை கொலை செய்த கும்பலை பிடிக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவபிரசாத் உத்தரவின்பேரில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். இந்தநிலையில் அந்த கும்பலைச் சேர்ந்த 6 பேர் மதுரை மாவட்ட 6-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தனர். அவர்கள் மாவுத்தன்பட்டியை சேர்ந்த அபிஷேக்(21), அழகர்சாமி(21), ரவிக்குமார் (21), விஜயகுமார் (22), தளபதி (21), கரண்(22) ஆகியோர் என தெரிந்தது.

அவர்களை வருகிற 21-ந்தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்கும்படி மாஜிஸ்திரேட்டு சந்தனகுமார் உத்தரவிட்டார். அதன்பேரில் போலீசார் அவர்களை சிறையில் அடைத்தனர்.

Related Tags :
மேலும் செய்திகள்