< Back
மாநில செய்திகள்
மீஞ்சூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் கைது
திருவள்ளூர்
மாநில செய்திகள்

மீஞ்சூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் கைது

தினத்தந்தி
|
1 Jun 2023 3:10 PM IST

மீஞ்சூர் அருகே அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அடுத்த வல்லூர் கிராமத்தில் வசித்து வந்தவர் பஞ்சநாதன் (வயது 57). வல்லூர் அ.தி.மு.க. வார்டு செயலாளராகவும் ரியல் எஸ்டேட் தொழில் செய்தும் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் ஒப்பந்த வேலை செய்தும் வந்தார். இந்த நிலையில் பஞ்சநாதன் வீட்டிற்கு வெளியே தூங்கிக் கொண்டிருக்கும் போது மர்ம நபர்கள் தலையில் கல்லை போட்டு கொலை செய்தனர்.

இது குறித்து மீஞ்சூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்த நிலையில் அத்திப்பட்டு புதுநகர் பகுதியை சேர்ந்த சுரேஷ் (45,), எர்ணாவூர் லிப்ட்கேட் பகுதியை சேர்ந்த ராமு (32), காட்டுப்பாக்கம் ராமதாஸ் நகர் பகுதியை சார்ந்த மகாராஜன் (31) ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

விசாரணையில் ரியல் எஸ்டேட் தொழிலில் பஞ்சநாதன், சுரேஷுக்கு நிலத்தை ஏமாற்றி விட்டதாகவும் அதில் ஏற்பட்ட தகராறில் பஞ்சநாதனை கொலை செய்ததாகவும் தெரியவந்தது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்