மயிலாடுதுறை
அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை, பூத் கமிட்டி முகாம்
|கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் சார்பில் அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே கொடியம்பாளையம் கிராமத்தில் அ.தி.மு.க. பூத் கமிட்டி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் கொள்ளிடம் கிழக்கு ஒன்றியம் சார்பில் நடைபெற்றது. முகாமிற்கு கொள்ளிடம் கிழக்கு ஒன்றிய செயலாளர் நற்குணன் தலைமை தாங்கினார். மாவட்ட மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம், மாவட்ட இளைஞரணி இணைச்யலாளர் பாஸ்கரன், ஒன்றிய எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பூவராகவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூத் கமிட்டி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாமை முன்னாள் எம்.எல்.ஏ.வும் மாவட்ட மகளிர் அணி செயலாளருமான சக்தி கலந்து கொண்டு தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். பின்னர் கடந்த கால அ.தி.மு.க. ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்து பொதுமக்களிடம் எடுத்து கூற வேண்டும் என பேசினார். இந்த கூட்டத்தில் மாவட்ட பேரவை இணை செயலாளர் சொக்கலிங்கம், மாவட்ட நிர்வாகி இனியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைப்போல் மகாராஜபுரம், வேட்டங்குடி, ஆரப்பள்ளம், ஆச்சாள்புரம், முதலை மேடு, மகேந்திரப்பள்ளி, காட்டூர், மாதானம் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் பூத் கமிட்டி மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் நடைபெற்றது. இதில் கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.