< Back
மாநில செய்திகள்

ராணிப்பேட்டை
மாநில செய்திகள்
அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு

20 May 2022 10:51 PM IST
ஆற்காடு நகரமன்ற கூட்டத்தில் அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு ெசய்தனர்.
ஆற்காடு
ஆற்காடு நகர மன்ற அவசரக்கூட்டம் அங்குள்ள கூட்ட அரங்கில் நடந்தது. கூட்டத்துக்கு நகரமன்ற தலைவர் தேவிபென்ஸ்பாண்டியன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் பவளக்கொடி சரவணன், ஆணையாளர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சொத்து வரி, காலிமனை வரி, பொதுச் சீராய்வு குறித்துத் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அ.தி.மு.க. நகர மன்ற உறுப்பினர் கீதாசுந்தர் தலைமையில் அ.தி.மு.க. நகர மன்ற உறுப்பினர்கள் உதயகுமார், கண்மணி, விமலா ஆகிய 4 பேரும் வெளிநடப்பு செய்தனர். இருப்பினும், தி.மு.க. உறுப்பினர்களின் ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதில் நகரமன்ற உறுப்பினர்கள், அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.