< Back
மாநில செய்திகள்
விருதுநகர்
மாநில செய்திகள்
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம்
|30 Sept 2023 3:55 AM IST
அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஸ்ரீவில்லிபுத்தூரில் வார்டுகள் வாரியாக நாடாளுமன்றத் தேர்தலில் பூத்கமிட்டி அமைப்பது குறித்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மான்ராஜ் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். கூட்டத்தில் வர்த்தக அணி செயலாளர் குறிஞ்சி முருகன், கவுன்சிலர் செல்ல பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். பூத் கமிட்டி அமைப்பது குறித்து ஆலோசனை நடத்தி நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். அப்போது மான்ராஜ் எம்.எல்.ஏ. கூறுகையில் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.