< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு
மாநில செய்திகள்

அ.தி.மு.க. தீர்மானங்களை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் மேல்முறையீட்டு வழக்கில் இன்று தீர்ப்பு

தினத்தந்தி
|
25 Aug 2023 8:48 AM IST

கடந்த ஜூன் 28-ந்தேதி இருதரப்பினரும் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர்.

சென்னை,

அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11-ல் நடந்தது. அப்போது கட்சியில் ஒற்றை தலைமை கொண்டு வருவது உள்பட பல தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இந்த தீர்மானங்களை எதிர்த்தும், அதன் பின்னர், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிப்பை எதிர்த்தும் சென்னை ஐகோர்ட்டில் முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர் வைத்தியலிங்கம், எம்.எல்.ஏ. மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகரன் ஆகியோர் தனித்தனியாக தாக்கல் செய்த வழக்குகளை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், 4 பேரும் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கை நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் ஆகியோர் விசாரித்தனர். அப்போது இருதரப்பிலும் மூத்த வக்கீல்கள் ஆஜராகி வாதிட்டனர். அனைத்து தரப்பு வாதங்கள் முடிவடைந்த நிலையில், கடந்த ஜூன் 28-ந்தேதி இருதரப்பினரும் எழுத்துபூர்வமான வாதங்களை தாக்கல் செய்தனர். இதையடுத்து இந்த மேல்முறையீட்டு வழக்குகளின் தீர்ப்பை நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்து உத்தரவிட்டனர். இந்த நிலையில் இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10.30 மணிக்கு நீதிபதிகள் பிறப்பிப்பதாக ஐகோர்ட்டு பதிவுத் துறை அறிவித்துள்ளது.

மேலும் செய்திகள்