தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு மாற்றுக்கட்சி அ.ம.மு.க.தான் -டி.டி.வி.தினகரன் பேட்டி
|தி.மு.க.-அ.தி.மு.க.வுக்கு மாற்றுக்கட்சி அ.ம.மு.க.தான் என்றும், மக்கள் எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ளார்கள் என்றும் டி.டி.வி.தினகரன் கூறினார்.
சிவகங்கை,
ஒரு கட்சி மாநாடு நடத்துவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை. நீட் தேர்வு குறித்து தி.மு.க. உண்ணாவிரதம் இருந்து, அவர்களும் மக்களை ஏமாற்றுகிறார்கள்.
ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு ஊழல் நிறைந்ததாக இருந்ததால் மக்களின் நம்பிக்கையை இழந்தது. தி.மு.க. மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். ஆனால் அவர்களும் எடப்பாடி பழனிசாமிக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் இல்லை என்பது போல் ஆட்சி செய்கிறார்கள். எனவே இவர்களுக்கு மாற்றுக்கட்சி அ.ம.மு.க.தான். எங்கள் மீது மக்கள் நம்பிக்கை வைத்து இருப்பதால், எங்களை உறுதியாக தேர்ந்தெடுப்பார்கள்.
ரஜினிகாந்த்
நாடாளுமன்ற தேர்தலை எப்படி சந்திப்பது என்பது பற்றி விரைவில் முடிவு எடுப்போம். கூட்டணி பற்றி பின்னர் தெரியும்.
ரஜினிகாந்த் இமயமலை போய் வரும் வழியில் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத்தை சந்தித்துள்ளார். யோகி ஒரு துறவி என்பதால், அவர் காலில் விழுந்திருப்பார். துறவியிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்கு வயது வித்தியாசம் இல்லை. முற்றும் துறந்தவர் பாதத்தில் ஆசீர்வாதம் பெற்றிருப்பார். யோகியை துறவியாக ரஜினி பார்த்திருப்பார்.
பா.ஜனதா ஊழல் இல்லாமல் மத்தியில் ஆட்சி செய்வதாக அண்ணாமலை கூறுவது குறித்து கேட்கிறீர்கள். ஊழல் உள்ளதா? இல்லையா? என்பதை வரும் தேர்தலில் மக்கள்தான் முடிவு செய்வார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.