திருவள்ளூர்
விச்சூர் கிராமத்தில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் கைது
|விச்சூர் கிராமத்தில் அ.தி.மு.க. பிரமுகர் கொலை வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியத்திற்கு உட்பட்ட மணலிபுதுநகர் அருகே உள்ள விச்சூர் கிராமத்தை சேர்ந்தவர் சுமன். இவர் அ.தி.மு.க.வின் தொழிற்சங்க பிரிவு சோழவரம் ஒன்றிய செயலாளராக இருந்து வந்தார்.
இவரது மனைவி வைதேகி. விச்சூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவராக இருந்து வந்தார். இந்த நிலையில் சுமன் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்களால் வெட்டிக்கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து சுமனின் தந்தை சிவலிங்கம் மணலிபுதுநகர் போலீசில் புகார் செய்தார். கோவில் திருவிழா நடத்த வேண்டி ஊர் பெரியவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போது சரண் என்பருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக சுமனை வெட்டி படுகொலை செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு தெரிவித்திருந்தார்.
அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மணலிபுதுநகர் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது இந்த தனிப்படை போலீசார் விச்சூர் கங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சரண் (34), விச்சூர் மேட்டு தெருவை சேர்ந்த கரன் (24), கொடிப்பள்ளம் கிராமத்தை சேர்ந்த ராமு (24), எண்ணூர் சாஸ்திரி நகரை சேர்ந்த புவனேஷ்குமார் (31), எண்ணூர் அன்னை சிவகாமி நகரை சேர்ந்த நித்திஷ் (22) ஆகியோரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.