நாடாளுமன்ற தேர்தல்: கூட்டணி குறித்து பா.ம.க., தே.மு.தி.க.வுடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை
|அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழு நிர்வாகிகள் பா.ம.க. , தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
சென்னை,
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் பல்வேறு கட்சிகள் கூட்டணி, தொகுதி பங்கீடு உள்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றன. அந்த வகையில் தமிழ்நாட்டிலும் நாடாளுமன்ற தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைப்பது குறித்து பா.ம.க., தே.மு.தி.க. உடன் அ.தி.மு.க. பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. அ.தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவை சேர்ந்த நிர்வாகிகள் பா.ம.க., தே.மு.தி.க. உடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.
பா.ம.க. , தே.மு.தி.க. கூட்டணியை உறுதி செய்யும் பணியில் அ.தி.மு.க. மூத்த தலைவர்கள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, சி.வி. சண்முகம், தங்கமணி பேசி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் பா.ம.க. , தே.மு.தி.க. கேட்கும் தொகுதிகள் எவை? கட்சிகளின் எதிர்பார்ப்பு என்ன? என்பது குறித்து அ.தி.மு.க. கேட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.