< Back
மாநில செய்திகள்
பெரியகுளத்தில் அ.தி.மு.க. எம்.பி. அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு
தேனி
மாநில செய்திகள்

பெரியகுளத்தில் அ.தி.மு.க. எம்.பி. அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு

தினத்தந்தி
|
11 July 2022 9:57 PM IST

பெரியகுளத்தில் உள்ள அ.தி.மு.க. எம்.பி. அலுவலகத்துக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

சென்னையில் அ.தி.மு.க. பொதுக்குழுவில் இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்டார். அதே நேரத்தில் ஓ.பன்னீர்செல்வம் தனது ஆதரவாளர்களுடன் அ.தி.மு.க. தலைமை அலுவலகத்துக்குள் சென்றார். அவருடைய ஆதரவாளர்கள் தலைமை அலுவலகத்தின் கதவை உடைத்து உள்ளே புகுந்தனர்.

இந்த சம்பவத்தை தொடர்ந்து தேனி மாவட்டம், பெரியகுளத்தில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் மகனும், தேனி அ.தி.மு.க. எம்.பி.யுமான ப.ரவீந்திரநாத்தின் அலுவலகம் முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் குவிக்கப்பட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. எம்.பி. அலுவலகம் முன்பு எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்கள் யாரேனும் திரண்டு விடாமல் தடுக்கும் வகையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்டது.

மேலும் பெரியகுளம் தெற்கு அக்ரஹாரம் தெருவில் உள்ள ஓ.பன்னீர்செல்வத்தின் வீட்டில் ஏற்கனவே போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்த நிலையில், அந்த வீட்டுக்கு செல்லும் வழியிலும் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அத்துடன் பெரியகுளம் மற்றும் போடியில் உள்ள ஓ.பன்னீர்செல்வம் வீடுகளின் முன்பு மோட்டார் சைக்கிள் ரோந்து படை போலீசார் அவ்வப்போது ரோந்து பணி மேற்கொண்டனர். எம்.பி. அலுவலகம் முன்பு காலையில் போலீசார் குவிக்கப்பட்ட நிலையில் பிற்பகல் வரை கட்சியினர் யாரும் அங்கு வராததால் போலீசார் அங்கிருந்து புறப்பட்டுச் சென்றனர்.

மேலும் செய்திகள்