< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அ.தி.மு.க. முன்னாள் எம்.எல்.ஏ. வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
|28 Feb 2024 9:02 AM IST
சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் மீதான மோசடி வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
கடலூர்,
பண்ருட்டி அ.தி.மு.க. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சத்யா பன்னீர்செல்வம் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் மீதான மோசடி வழக்கு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் இந்த சோதனையை மேற்கொண்டு வருகின்றனர்.
கடந்த 2011 முதல் 2016 வரை சத்யாவின் கணவர் பன்னீர்செல்வம் பண்ருட்டி நகராட்சி தலைவராக செயல்பட்டு வந்தார். இந்த நிலையில் பன்னீர்செல்வம் நகராட்சி தலைவராக இருந்த போது, இருசக்கர வாகன நிறுத்துமிடம் டெண்டரில் ரூ.20 லட்சம் மோசடி செய்ததாக வழக்குப்பதிவு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.