< Back
மாநில செய்திகள்
இஸ்லாமியர்களுக்கு அ.தி.மு.க. அரணாக உள்ளது - எடப்பாடி பழனிசாமி பேச்சு
மாநில செய்திகள்

இஸ்லாமியர்களுக்கு அ.தி.மு.க. அரணாக உள்ளது - எடப்பாடி பழனிசாமி பேச்சு

தினத்தந்தி
|
13 March 2024 7:10 PM IST

மக்களுடன் அ.தி.மு.க. வைத்திருக்கும் கூட்டணி தான் பலமான கூட்டணி என்று எடப்பாடி பழனிசாமி கூறினார்.

சென்னை,

சென்னை எழுப்பூரில் அ.தி.மு.க. சார்பில் நடைபெற்ற ரமலான் இப்தார் நோன்பு திறப்பு விழாவில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசியதாவது:-

இஸ்லாமியர்களுக்கு அ.தி.மு.க. அரணாக உள்ளது. தற்போது இஸ்லாமியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் சிறுபான்மையின மக்கள் மகிழ்ச்சியாகவும், பாதுகாப்பாகவும் உணர்ந்தனர். தற்போதைய தி.மு.க. ஆட்சியில் சிறுபான்மையின மக்கள் நிம்மதி இன்றி இருக்கிறார்கள். அராஜக வழியில் செல்பவர்களை விட நல்லவர்களாக சென்றால் தான் உண்மையான வெற்றி கிடைக்கும்.

அ.தி.மு.க.விடம் நேர்மை, நியாயம், தர்மம் உள்ளிட்டவை இருக்கிறது. நாங்கள் மக்களுடன் கூட்டணி அமைத்துள்ளோம். தமிழ்நாட்டு மக்களுடன் அ.தி.மு.க. வைத்திருக்கும் கூட்டணி தான் பலமான கூட்டணி. அ.தி.மு.க. - பா.ஜ.க உடன் இணக்கமாக இருப்பதாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்னார். அ.தி.மு.க. எப்போதும் நேர்மையான பாதையில்தான் சென்றுகொண்டு இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்