< Back
மாநில செய்திகள்
ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை
மாநில செய்திகள்

ஜெயலலிதா திருவுருவப் படத்திற்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மலர் தூவி மரியாதை

தினத்தந்தி
|
24 Feb 2024 10:46 AM IST

எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

சென்னை,

மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் 76-வது பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்கள் அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

மேலும் தமிழ்நாடு முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சென்னை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதா சிலைக்கு கீழ் வைக்கப்பட்டுள்ள அவரது திருவுருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும், வைத்திலிங்கம், ஜே.சி.டி பிரபாகர், புகழேந்தி உள்ளிட்டோரும் ஜெயலலிதா படத்திற்கு மரியாதை செலுத்தினர்.

மேலும் செய்திகள்