< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
செங்கோட்டையில் அ.தி.மு.க. கொடியேற்று விழா
|18 Oct 2023 12:15 AM IST
செங்கோட்டையில் அ.தி.மு.க. கொடியேற்று விழா நடந்தது.
அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழாவையொட்டி, செங்கோட்டை மேலூர் முத்தழகி அம்மன் கோவில் அருகில் தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. அறிவுறுத்தலின்பேரில் நகர அவைத்தலைவா் தங்கவேலு தலைமையில் கட்சி கொடியேற்று விழா நடந்தது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா உருவப்படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்யப்பட்டது. பெரியசாமி தெருவில் உள்ள முன்னாள் அமைச்சா் செந்தூர் பாண்டியன் நினைவு கொடிக்கம்பத்தில் நகரச்செயலாளா் கணேசன் கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.