< Back
நாடாளுமன்ற தேர்தல்-2024
நாடாளுமன்ற தேர்தல்-2024
கூட்டணியை நம்பி அ.தி.மு.க இல்லை..யார் வந்தாலும் வரவேற்போம் - எடப்பாடி பழனிசாமி பேட்டி
|20 March 2024 10:22 AM IST
2024 மக்களவைத் தேர்தலையொட்டி எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டார்.
சென்னை,
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க கட்சி தலைமை அலுவலகத்தில் 2024 மக்களவைத் தேர்தலில் போட்டியிடும் 16 வேட்பாளர்கள் அடங்கிய முதற்கட்ட பட்டியலை வெளியிட்டார். அதனை தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பில் கூறியதாவது:
2014 தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டு வெற்றி பெற்ற இயக்கம் அ.தி.மு.க., 3 ஆண்டுகளில் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளது. அ.தி.மு.க. வுக்கு மக்கள் செல்வாக்கு அதிகரித்துள்ளது. மக்களவைத்தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பெறும். மக்களவைத்தேர்தலின் அறிக்கை விரைவில் எதிர்பார்க்கலாம். கூட்டணியை நம்பி அ.தி.மு.க இல்லை. யார் வந்தாலும் வரவேற்போம் என்றார்.