ராணிப்பேட்டை
அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம்
|ஆற்காடு, திமிரி, தாமரைப்பாக்கத்தில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம் நடைபெற்றது.
ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க. மாவட்ட செயலாளராக ராணிப்பேட்டை எஸ்.எம்.சுகுமாரை கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நியமித்துள்ளார். அதைத்தொடர்ந்து ஆற்காடு கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் மாவட்ட செயலாளர் அறிமுக கூட்டம், தலைவர்களின் சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. ஆற்காடு- கலவை சாலை புதிய வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகிலிருந்து மேளதாளங்களுடன் ஊர்வலமாக வந்து பழைய வட்டார வளர்ச்சி அலுவலகம் பட்டாசு வெடித்தனர்.
நிகழ்சிக்கு ஆற்காடு கிழக்கு ஒன்றிய செயலாளர் வளவனூர் எஸ்.அன்பழகன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் கலந்து கொண்டு அண்ணா, எம்.ஜி.ஆர். உள்ளிட்ட தலைவர்களின் சிலைக்கும், ஜெயலலிதா உருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்களுக்கு இனிப்பு, அன்னதானம் வழங்கினார்.
அப்போது அவர் சாதாரண தொண்டனான எனக்கு மாவட்ட செயலாளர் பொறுப்பை வழங்கிய பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமிக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
வரும் நாடாளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் யாரை வேட்பாளராக அறிவித்தாலும் அவரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்ய வேண்டும். அனைவரும் ஒற்றுமையாக பணியாற்றி வரும் சட்டமன்ற தேர்தலில் இன்றைய எதிர்க்கட்சி தலைவரை முதலமைச்சராக்க உறுதி ஏற்றுக்கொள்வோம் என்றார்.
நிகழ்ச்சியில் முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.சி.ஏழுமலை, முன்னாள் எம்.எல்.ஏ. வி.கே.ஆர்.சீனிவாசன், மாவட்ட துணை செயலாளர் ரமாபிரபா, ஒன்றிய நிர்வாகிகள் அதிரடி அரங்கநாதன், பாலாஜி, கீர்த்தி, ரவி, செல்வி, அரிதாஸ், சார்பு அணி ஒன்றிய செயலாளர்கள் கு.ஜெயமுருகன், ஜெகநாதன், சங்கர், செந்தில்குமார், சிவராஜ் ஒன்றியக்குழு உறுப்பினர் காஞ்சனாசேகர், மாவட்ட நிர்வாகிகள், கிளை பொறுப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
அதேபோல் திமிரி நகர அ.தி.மு.க. சார்பில் தேரடியில் நகர செயலாளர் டி.எஸ்.கந்தசாமி தலைமையில் தலைவர்களின் படத்திற்கு மாலை அணிவித்து பொதுமக்களுக்கு மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் இனிப்பு வழங்கினார். நகர நிர்வாகி நாரயணமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
திமிரி மேற்கு ஒன்றிய அ.தி.மு.க. சார்பில் தாமரைபாக்கத்தில் ஒன்றிய செயலாளர் ந.வ.கிருஷ்ணன் தலைமையில் மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார், எம்.ஜி.ஆர். சிலைக்கும், ஜெயலிலதா உருவபடத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, 2 இடங்களில் கட்சி கொடி ஏற்றிவைத்து இனிப்பு வழங்கினார். இதில் ஒன்றிய நிர்வாகிகள் செங்கோடான், ஜெயலட்சுமிசேகர், ஜெயபால், விநாயகம், சரவணன், சார்பு அணி பொறுப்பாளர்கள் உலகநாதன், ரமேஷ், நாராயணன், சதீஷ் ஒன்றிய கவுன்சிலர் ஜெயவேலு மற்றும் திரளான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.