< Back
மாநில செய்திகள்
புதுக்கோட்டை
மாநில செய்திகள்
அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
|16 Oct 2023 10:52 PM IST
இலுப்பூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
இலுப்பூர் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்து இலுப்பூர் அ.தி.மு.க. நகர செயலாளர் சத்யா மணிகண்டன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்தில் இலுப்பூர் பேரூராட்சி பகுதியில் மத்திய அரசின் நிதி உதவியால் பிரதமர் மோடி வீடு திட்டத்தின் கீழ், இலுப்பூர் பேரூராட்சியில் கட்டப்பட்டுள்ள வீடுகளுக்கு நீண்ட நாட்களாக வீடு கட்டி முடித்து பணம் கொடுக்காமல் காத்திருக்கின்றனர். உண்மையான பயனாளிகளுக்கு பணம் ஏற்றாமல் அனுமதியே வாங்காமல் ஏற்கனவே கட்டிமுடித்த வீடுகளுக்கு முறைகேடாக பணம் ஏற்றியுள்ளதாகவும், உண்மை பயனாளிகளை அலைக்கழித்தும், வஞ்சித்தும், ஒருதலை பட்சமாக செயல்படும் பேரூராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், உண்மையான பயனாளிகளுக்கு உடனடியாக பணத்தை விடுவிக்க கோரியும் கோஷம் எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க. பேரூராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.