< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
அ.தி.மு.க. தொடர்ந்த அவதூறு வழக்கு: 13-ந் தேதி நீதிமன்றத்தில் ஆஜராவேன்- சபாநாயகர் அப்பாவு
|11 Sept 2024 1:02 AM IST
அ.தி.மு.க. வக்கீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக வருகிற 13-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராவேன் என அப்பாவு தெரிவித்தார்.
நெல்லை,
நெல்லையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சபாநாயகர் அப்பாவு கூறியதாவது,
அ.தி.மு.க.வை சேர்ந்த வக்கீல் எனக்கு எதிராக தொடர்ந்த அவதூறு வழக்கில் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நான் ஆஜராக வேண்டும் என கூறப்பட்டது. ஆனால் அது தொடர்பாக எனக்கு எந்த சம்மனும் வரவில்லை. எனது தனி பாதுகாவலரிடம் சம்மன் சென்றதாகவும், அதை அவர் வாங்காமல் திருப்பி அனுப்பியதாகவும் கூறப்படுகிறது. அதில் உண்மை இல்லை. எனினும் எனது வக்கீல்கள் கடந்த 9-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகினர். நான் உண்மையை மட்டுமே பேசுவேன்.அ.தி.மு.க. வக்கீல் தொடர்ந்த அவதூறு வழக்கு தொடர்பாக வருகிற 13-ந்தேதி நீதிமன்றத்தில் ஆஜராகிறேன்.இவ்வாறு அவர் கூறினார்.