< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது
சிவகங்கை
மாநில செய்திகள்

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

தினத்தந்தி
|
23 Oct 2023 12:15 AM IST

அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

சிவகங்கை மாவட்ட அ.தி.மு.க. சார்பில் பூத் கமிட்டி இளைஞர் இளம்பெண்கள் பாசறை மற்றும் மகளிர் அணி ஆலோசனை கூட்டம் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் அமைப்பு செயலாளர்கள் பாஸ்கரன், ஏ.கே. ஸ்ரீனிவாசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உமாதேவன், கற்பகம், நாகராஜன், குணசேகரன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் இளங்கோவன், மாவட்ட அவைத்தலைவர் நாகராஜன், நகர் செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் கருணாகரன், சேவியர்தாஸ், கோபி, செல்வமணி, பழனிசாமி, சிவாஜி, தசரதன், தேவகோட்டை நகர சபை தலைவர் சுந்தரலிங்கம், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர்கள் கருப்பையா, பில்லூர் ராமசாமி, மாரிமுத்து, பாக்கியலட்சுமி அழகுமலை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை தலைவர் வக்கீல் ராஜா, உள்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் இளைஞர் இளம்பெண்கள் பாசறை சார்பில் 25 நிர்வாகிகள் அடங்கிய கமிட்டியும், மகளிர் அணி சார்பில் 25 நிர்வாகிகள் அடங்கிய கமிட்டியும் அமைப்பது எனவும், இந்த கமிட்டியில் இருந்து தலா 9 பேர் தேர்வு செய்து இவர்களுடன் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள், கட்சி நிர்வாகிகள் அடங்கிய 19 பேர் கொண்ட பூத் கமிட்டி அமைப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்