< Back
மாநில செய்திகள்
மேடவாக்கம், அய்யப்பன்தாங்கல் பகுதியில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்
சென்னை
மாநில செய்திகள்

மேடவாக்கம், அய்யப்பன்தாங்கல் பகுதியில் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

தினத்தந்தி
|
15 Dec 2022 10:18 AM IST

விலைவாசி உயர்வை கண்டித்து மேடவாக்கம் மற்றும் அய்யப்பன்தாங்கல் பகுதியில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னையை அடுத்த மேடவாக்கம் சந்திப்பில் பரங்கிமலை ஒன்றிய அ.தி.மு.க. சார்பில், தமிழகத்தில் மின் கட்டணம், பால் விலை, சொத்துவரி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு ஒன்றிய செயலாளரும், முன்னாள் கவுன்சிலருமான பெரும்பாக்கம் ராஜசேகர் தலைமை தாங்கினார். இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கே.பி.கந்தன், ஊராட்சி துணை தலைவர் மணிமாறன், மாநகராட்சி கவுன்சிலர் சதீஷ் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், பெண்கள் என 500-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

இதேபோல் போரூர் அடுத்த அய்யப்பன்தாங்கலில் குன்றத்தூர் ஒன்றிய செயலாளர் ஏசுபாதம் தலைமையில் அ.தி.மு.க.வினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்னர். இதில் முன்னாள் அமைச்சர் வளர்மதி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில் மாவட்ட மாணவரணி செயலாளர் பூபதி உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்