ராமநாதபுரம்
லியோனி மீது அ.தி.மு.க.வினர் புகார்
|லியோனி மீது அ.தி.மு.க.வினர் புகார்
ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க செயலாளர் எம்.ஏ.முனியசாமி தலைமையில் அக்கட்சியினர் நேற்று மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
திருவெற்றியூர் மேற்கு பகுதியில் நடந்த கலைஞர் நூற்றாண்டு விழாவில் பேசிய தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி, முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குறித்து அவதூறாக பேசி உள்ளார். இது, 2½ கோடி தொண்டர்கள் கொண்டஅ.தி.மு.க.வினரின் மனதை புண்படுத்தும் வகையில் உள்ளது. இதுதொடர்பாக பொது வெளியில் அவதூறாக பேசியதற்கும், அதனை சமூக ஊடகங்களில் வெளியிட்டதற்கும் திண்டுக்கல் லியோனி மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது. மனுவை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்காவிட்டால் ராமநாதபுரம் மாவட்ட அ.தி.மு.க.வினர் லியோனி வீட்டின்முன் தொடர் போராட்டம் நடத்துவோம் என மாவட்ட செயலாளர் முனியசாமி தெரிவித்தார். அப்போது மாவட்ட அவை தலைவர் சாமிநாதன், நகர் செயலாளர் பால்பாண்டியன், மாணவரணி செயலாளர் செந்தில்குமார், கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜானகிராமன், இளைஞரணி துணை செயலாளர்கள் செல்வராஜ், நேதாஜி, வக்கீல் பிரிவு கருணாகரன் உடனிருந்தனர்.