கரூர்
அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
|பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும்: அ.தி.மு.க.வினர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்
அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச்செயலாளர் தேர்தலை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பினர் செய்த மேல்முறையீட்டு மனுக்கள் அனைத்தும் தள்ளுபடி செய்தும், அ.தி.மு.க. பொதுச்செயலாளர் கொண்டு வந்த பொதுக்குழு தீர்மானங்கள் அனைத்தும் செல்லும் என சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
இதனையொட்டி நேற்று கரூர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் கரூர் பஸ்நிலையம் அருகே உள்ள மனோகரா கார்னர் பகுதியில் மாவட்ட அவைத்தலைவர் திருவிகா தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் சிவசாமி, மாவட்ட மாணவர் அணி செயலாளர் சரவணன், முன்னாள் நகர செயலாளர் நெடுஞ்செழியன், கரூர் தெற்கு பகுதி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், மேற்கு பகுதி செயலாளர் சக்திவேல், மத்திய தெற்கு பகுதி செயலாளர் சேரன் பழனிச்சாமி, முன்னாள் பேரூர் கழக செயலாளர் சதாசிவம், மத்திய வடக்கு பகுதி செயலாளர் ஆண்டாள் தினேஷ்குமார், கிழக்கு பகுதி செயலாளர் சுரேஷ் மற்றும் அ.தி.மு.க. நிர்வாகிகள் தொண்டர்கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.