அரியலூர்
அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
|அரியலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
தீர்ப்பு
எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம் செல்லும் என உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வந்ததை அடுத்து எடப்பாடி பழனிசாமி ஆதரவாளர்களான அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றிய மேற்கு ஒன்றிய செயலாளர் சாமிநாதன் தலைமையிலான அ.தி.மு.க.வினர் கீழப்பழுவூர் பழைய பஸ் நிலையம் அருகே பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். இதில் கீழப்பழுவூர் நகர செயலாளர் மருதமுத்து உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள், தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
கொண்டாட்டம்
இதேபோல் ஜெயங்கொண்டம் நான்கு ரோட்டில் நகர அ.தி.மு.க. செயலாளர் பி.ஆர்.செல்வராஜ் தலைமையில், முன்னாள் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம் மற்றும் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். இதில் அ.தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
மீன்சுருட்டி கடை வீதியில் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணை செயலாளர் ராஜாரவி தலைமையில் அ.தி.மு.க.வினர் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.
தா.பழூர் சுத்தமல்லி பிரிவு சாலையில் கிழக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் அசோகன் உள்ளிட்ட திரளான அ.தி.மு.க.வினர் தா.பழூர் கடைவீதியில் உள்ள தெருவோர கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களில் இனிப்புகளை வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.