< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு
விருதுநகர்
மாநில செய்திகள்

அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்கு

தினத்தந்தி
|
30 Sept 2023 4:01 AM IST

அ.தி.மு.க. நிர்வாகிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சிவகாசி,

திருத்தங்கல் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியராஜன் செங்கமலநாச்சியார்புரம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்கு உரிய அனுமதியின்றி 3 இடங்களில் அ.தி.மு.க. பேனர் வைக்கப்பட்டிருந்தது. இதை தொடர்ந்து அந்த பேனரை வைத்த அனைத்துலக எம்.ஜி.ஆர். மன்ற துணை செயலாளர் பாபுராஜ், மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேசன், மாவட்ட துணை செயலாளர் வேண்டுராயபுரம் சுப்பிரமணியம் ஆகியோர் மீது திருத்தங்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்