< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்
அரியலூர்
மாநில செய்திகள்

அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம்

தினத்தந்தி
|
20 Oct 2023 1:03 AM IST

அரியலூரில் அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் நடைபெற்றது.

அரியலூரில் உள்ள அ.தி.மு.க. அலுவலகத்தில் பூத் கமிட்டி அமைக்கும் கூட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கினார். அவைத்தலைவர் ராமஜெயலிங்கம் முன்னிலை வகித்தார். அரியலூர் மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஆசை மணி கூறுகையில், அரியலூர், ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியில் உள்ள 603 பூத்களில் கமிட்டி அமைப்பது பற்றியும், அடுத்த மாதம் 5-ந் தேதிக்குள் பூத் கமிட்டி அமைப்பதற்கான அனைத்து ஆவணங்களையும் தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றும் ஆலோசனை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் முன்னாள் எம்.பி. இளவரசன், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாணவர் அணி செயலாளர் சங்கர், தாமரைக்குளம் ஊராட்சி மன்ற தலைவர் பிரேம்குமார் மற்றும் பூத் கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்