< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்
விருதுநகர்
மாநில செய்திகள்

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம்

தினத்தந்தி
|
30 Sept 2023 3:36 AM IST

அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

சிவகாசி,

சிவகாசி அருகே உள்ள வடபட்டியில் அ.தி.மு.க. மேற்கு ஒன்றிய கழகம் சார்பாக பூத் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிவகாசி மேற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு பூர்த்தி செய்யப்பட்ட பூத் கமிட்டி மற்றும் உறுப்பினர் விவர கையேடுகள் வழங்கப்பட்டன. கூட்டத்தில் மாவட்ட துணைச் செயலாளரும், முன்னாள் யூனியன் தலைவருமான வேண்டுராயபுரம் சுப்ரமணியம், திருத்தங்கல் பகுதி செயலாளர் சரவணகுமார், தேவர்குளம் ஊராட்சி மன்ற தலைவர் முத்துவள்ளி மச்சக்காளை, மாநகராட்சி கவுன்சிலர் கரைமுருகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணைச்செயலாளர் வழக்கறிஞர் மாரீஸ்குமார், பூவநாதபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மகாலட்சுமி ராஜகிருஷ்ணா, நடுவப்பட்டி குமரேசன், ஒன்றிய ஜெயலலிதா பேரவை செயலாளர் பால்பாண்டி, மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் எம்.கே.என். செல்வம், ஒன்றிய துணைச் செயலாளர் அமுதா, ஒன்றிய மாணவரணி செயலாளர் வடபட்டி தனுஷ், கிளைச் செயலாளர்கள் முத்துராஜ், ராமசாமி, முத்துராஜ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.


மேலும் செய்திகள்