< Back
மாநில செய்திகள்
புழல் அருகே கிரிக்கெட் மட்டையால் வாலிபரை தாக்கிய அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் கைது
சென்னை
மாநில செய்திகள்

புழல் அருகே கிரிக்கெட் மட்டையால் வாலிபரை தாக்கிய அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேர் கைது

தினத்தந்தி
|
9 Jun 2023 2:33 PM IST

புழல் அருகே கிரிக்கெட் மட்டையால் வாலிபரை தாக்கிய அ.தி.மு.க. நிர்வாகி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை அடுத்த புழல் விநாயகபுரம் கல்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பச்சையப்பன் (வயது 30). இவரது தெருவில் சில வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்றுள்ளனர். இதை பச்சையப்பன் தட்டி கேட்டார். இதனால் ஆத்திரமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகி கந்தராஜ் (34) மற்றும் அவரது உறவினர் கார்த்திக் (26) ஆகியோர் பச்சையப்பனை வீடு புகுந்து கிரிக்கெட் மட்டையால் சரமாரியாக தாக்கினர்.

இதில் படுகாயமடைந்த பச்சையப்பன் சென்னை ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து பச்சையப்பன் கொடுத்த புகாரின் பேரில் புகழ் இன்ஸ்பெக்டர் சண்முகம் வழக்குப்பதிவு செய்து அ.தி.மு.க. நிர்வாகி கந்தராஜ் மற்றும் அவரது உறவினர் கார்த்திக் ஆகிய 2 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்