< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க. நிர்வாகி, டிரைவர் மீது தாக்குதல்
விருதுநகர்
மாநில செய்திகள்

அ.தி.மு.க. நிர்வாகி, டிரைவர் மீது தாக்குதல்

தினத்தந்தி
|
19 Sept 2023 12:28 AM IST

விருதுநகர் அருகே அ.தி.மு.க. நிர்வாகி, கார் டிரைவரை தாக்கிய யூனியன் கவுன்சிலர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.


விருதுநகர் அருகே அ.தி.மு.க. நிர்வாகி, கார் டிரைவரை தாக்கிய யூனியன் கவுன்சிலர் உள்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

அ.தி.மு.க. நிர்வாகி

விருதுநகர் கிழக்கு ஒன்றிய அ.தி.மு.க. செயலாளராக இருப்பவர் தர்மலிங்கம் (வயது 43). இவரது மனைவி முத்துலட்சுமி. விருதுநகர் யூனியன் துணைத்தலைவராக உள்ளார். தர்மலிங்கம் நேற்று முன்தினம் இரவு கட்சி பணி குறித்து பேச விருதுநகர் அருகே கோட்டூரில் உள்ள அ.தி.மு.க. நிர்வாகி நாகராஜ் என்பவரது அலுவலகத்திற்கு தனது காரில் சென்றார்.

தர்மலிங்கம், நாகராஜன் மற்றும் சிலருடன் பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த விருதுநகர் அ.தி.மு.க. யூனியன் கவுன்சிலர் சென்னல்குடி மாரியப்பனின் மகன் செந்தூர்பாண்டி (35), என்பவர் சென்னல்குடி மாரியப்பனை கிளைச்செயலாளர் பதவியில் இருந்து நீக்கியது ஏன்? என்று வாக்குவாதம் செய்தார்.

கத்திக்குத்து

வாக்குவாதம் முற்றியதில் செந்தூர் பாண்டி, தர்மலிங்கத்தை கத்தியால் குத்த முயன்றார். அதனை தர்மலிங்கம் தடுக்க முயன்ற போது அவரது கையில் கத்திக்குத்து விழுந்தது .

இதையடுத்து தர்மலிங்கம் தனது காரில் விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்றனர். அப்போது செல்லும் வழியில் கவுன்சிலர் சென்னல்குடி மாரியப்பன், அவரது மகன்கள் உள்பட 10 பேர் காரை சென்னல்குடியில் வைத்து வழிமறித்தனர்.

அப்போது தர்மலிங்கத்தின் டிரைவர் மகேஷ் கண்ணன், தர்மலிங்கத்தை ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்ல வேண்டும் என கூறினார். இதனால் அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

10 பேர் மீது வழக்கு

இதையடுத்து அவர்கள் மகேஷ்கண்ணனை அரிவாளால் வெட்டினர். இதில் மகேஷ் கண்ணனுக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. பின்னர் தர்மலிங்கமும், மகேஷ் கண்ணனும் அங்கிருந்து காரில் தப்பி சென்று விருதுநகர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்ந்தனர்.

இந்த சம்பவம் குறித்து தர்மலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் செந்தூர்பாண்டி மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வச்சகாரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மகேஷ் கண்ணன் கொடுத்த புகாரின் பேரில் சென்னல்குடி மாரியப்பன், அவரது மகன்கள் செந்தூர் பாண்டி, செல்லப்பாண்டி உள்பட 10 பேர் மீது சூலக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்