< Back
மாநில செய்திகள்
தி.மு.க.வினர் மீது அ.தி.மு.க. நிர்வாகி புகார்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

தி.மு.க.வினர் மீது அ.தி.மு.க. நிர்வாகி புகார்

தினத்தந்தி
|
26 Sept 2023 12:15 AM IST

போலீஸ்சூப்பிரண்டு அலுவலகத்தில் தி.மு.க.வினர் மீது அ.தி.மு.க. நிர்வாகி புகார் மனு கொடுத்தார்.

உளுந்தூர்பேட்டை அ.தி.மு.க. நகர பொருளாளர் துரை(வயது 58) என்பவர் கட்சி நிர்வாகிகளுடன் கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர்லால்லிடம் புகார் மனு கொடுத்தார். அதில் கடந்த 20-ந் தேதி உளுந்தூர்பேட்டையில் நடந்த அண்ணா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டத்துக்காக அ.தி.மு.க. சார்பில் வைக்கப்பட்ட பேனர்களை தி.மு.க.வினர் சிலர் கிழித்துக்கொண்டிருந்தனர். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த என்னை அவர்கள் அசிங்கமாக திட்டி, தாக்கி கொலைமிரட்டல் விடுத்து வாகனத்தை சேதப்படுத்தினார்கள். எனவே இச்சம்பவத்துக்கு காரணமானதி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்