அரியலூர்
அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம்
|அரியலூரில் அ.தி.மு.க. ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அரியலூர் மாவட்டம் வி.கைகாட்டி அருகே சுண்டக்குடியில் அ.தி.மு.க. பூத் கமிட்டி ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அரசு தலைமை கொறடாவுமான தாமரை ராஜேந்திரன் தலைமை தாங்கி பேசுகையில், தி.மு.க. தேர்தல் நேரத்தில் பொய்யான வாக்குறுதிகளை அளித்து ஆட்சி அமைத்து இதுவரை மக்களுக்கு எவ்விதமான நல திட்டங்களையும் வழங்காமல் மக்களுக்கு விரோதமான ஆட்சியாக செயல்பட்டு வருகிறது. எனவே தி.மு.க. அரசை அகற்றி நமது அ.தி.மு.க. ஆட்சி அமைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து கட்சியின் கரங்களை வலு படுத்த அயராது கழக நிர்வாகிகள் பாடுபட வேண்டும். மேலும் தமிழகத்தில் மிகப்பெரிய கட்சியான அ.தி.மு.க. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு 40 தொகுதிகளிலும் வெற்றி கொடி நாட்டி பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும் என்றார். இதில் அரியலூர் தெற்கு ஒன்றிய செயலாளர் பொய்யூர் பாலசுப்ரமணியன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் சிவசங்கர், பொதுக்குழு உறுப்பினர் சிவபெருமான், ஒன்றிய கழக துணை செயலாளர் சங்கர், மாவட்ட பொருளாளர் அன்பழகன், மாவட்ட மாணவரணி செயலாளர் ஓ.பி.சங்கர் மற்றும் மகளிர் அணியினர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.