< Back
மாநில செய்திகள்
அ.தி.மு.க.நிர்வாகி திடீர் சாவு
விழுப்புரம்
மாநில செய்திகள்

அ.தி.மு.க.நிர்வாகி திடீர் சாவு

தினத்தந்தி
|
21 Aug 2023 1:05 AM IST

மதுரை மாநாட்டுக்கு சென்ற அ.தி.மு.க.நிர்வாகி திடீரென இறந்தார்.

செஞ்சி,

செஞ்சி அருகே நெகனூர் கிராமத்தை சேர்ந்தவர் பொன்னுசாமி (வயது 62). இவர் வல்லம் ஒன்றிய அ.தி.மு.க. இணை செயலாளர் மற்றும் கிளை செயலாளராக இருந்து வந்தார். இந்த நிலையில் நேற்று மதுரையில் நடைபெற்ற அ்.தி.மு.க. மாநாட்டுக்கு தொண்டர்களுடன் பஸ்சில் சென்றார். பின்னர் அவர்கள் மீண்டும் ஊருக்கு பஸ்சில் புறப்பட்டனர். அப்போது பொன்னுசாமிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதில் மயங்கி விழுந்து அவர் பரிதாபமாக இறந்தார். இதைபார்த்த அ.தி.மு.க. தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து அவரது உடல் சொந்த ஊருக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்