அரியலூர்
அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
|அரியலூரில் அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.
அரியலூரில் மாவட்ட அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் கட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் ராமஜெயலிங்கம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் தாமரை ராஜேந்திரன் கலந்து கொண்டு பேசுகையில், கட்சி உறுப்பினர் சேர்க்கை 95 சதவீதம் முடிவடைந்துள்ளது. பூத் கமிட்டி அமைக்கும் பணி இன்னும் முழுமையாக முடியவில்லை. பாராளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளது. மேலும் சட்டமன்றத் தேர்தலும் சேர்த்து நடைபெறும் சூழ்நிலை உருவாகியுள்ளது. பூத் கமிட்டியை விரைந்து அமைத்து அதன் படிவங்களை தலைமைக் கழகத்திற்கு அனுப்பி வைக்க வேண்டும். சிறிய கட்சிகள் கூட வேட்பாளர்களை அறிவித்துள்ளது. நாம் நமது பணிகளை விரைந்து முடித்து நடைபெற உள்ள தேர்தலில் 40 இடங்களையும் பிடிக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சராக எடப்பாடி பழனிசாமியை அமர்த்த வேண்டும் என்றார். கூட்டத்தில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் நகர செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.