< Back
மாநில செய்திகள்
அதியமான்கோட்டையில்அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
தர்மபுரி
மாநில செய்திகள்

அதியமான்கோட்டையில்அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு

தினத்தந்தி
|
16 April 2023 12:30 AM IST

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே அதியமான்கோட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் அ.தி.மு.க. சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் சிவப்பிரகாசம், அதியமான்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் மாரியம்மாள் முனிராஜ் ஆகியோர் தலைமை தாங்கினர். எம்.எல்.ஏ. கோவிந்தசாமி, மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் எஸ்.ஆர்.வெற்றிவேல், சார்பு அணி நிர்வாகி பழனிசாமி, கிளை செயலாளர் பிரேம்குமார் மற்றும் ரிஷிகேசன், வேலு, தண்டபாணி, அன்பு, அங்கப்பன் கோவிந்தசாமி, செந்தில், மாதேஷ், மனோகரன், கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக தர்மபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார். பின்னர் அவர் பொதுமக்களுக்கு இளநீர், தர்பூசணி, நுங்கு ஆகியவற்றை வழங்கினார். இதில் கூட்டுறவு வங்கி தலைவர்கள் அருவி, அம்மாசி, அங்குராஜ், தர்மலிங்கம், ஜெயக்குமார் மற்றும் மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி, குழந்தைசாமி, கிருஷ்ணசாமி, சுப்பிரமணியம், மாணிக்கம், மாது, வசந்தா சின்னசாமி, ஜோசப், திருமால்வர்மா, மணி மற்றும் ரஞ்சித்குமார், மூர்த்தி, செல்வம் உள்பட கட்சியின் மாவட்ட, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், சார்பு அணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்