சென்னை
அ.தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
|ரவுடி ஆற்காடு சுரேஷ் கொலை வழக்கில் கைதான அ.தி.மு.க. பிரமுகர்கள் உள்பட 8 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
சென்னை புளியந்தோப்பு நரசிம்மபுரத்தைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ஆற்காடு சுரேஷ் (வயது 49). இவர் மீது 7 கொலை வழக்குகள் உள்பட 40-க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்டு மாதம் 18-ந் தேதி அன்று ஆற்காடு சுரேஷ், ஒரு வழக்கு விசாரணைக்காக, எழும்பூர் 10-வது கோர்ட்டில் ஆஜரானார். அப்போது எதிராளிகள் ஆற்காடு சுரேசை வெட்டி சாய்த்து தீர்த்துக்கட்டி விட்டனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசார் கொலை வழக்குப் பதிவு செய்து ஜெயபால் (63), யமஹா மணி, சைதாப்பேட்டை சந்துரு, மோகன், நெல்லையைச் சேர்ந்த ரவுடிகளான செந்தில்குமார், முத்துக்குமார், அ.தி.மு.க.பிரமுகர்கள் ஜோகன் கென்னடி (53), சுதாகர் பிரசாத் (34) உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.
இந்த நிலையில் இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட கோபால், செந்தில்குமார், முத்துக்குமார், நவீன், இசக்கிமுத்து, மற்றும் அ.தி.மு.க.பிரகர்கள் ஜோகன் கென்னடி, சுதாகர்பிரசாத் உள்ளிட்ட 8 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் 1 ஆண்டு சிறையில் தள்ள போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய்ரத்தோர் உத்தரவிட்டார்.