கரூர்
அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழா: அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
|அ.தி.மு.க. 52-ம் ஆண்டு தொடக்க விழாவையொட்டி அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
அ.தி.மு.க.வின் 52-ம் ஆண்டு தொடக்க விழா கரூரில் நேற்று சிறப்பாக கொண்டாடப்பட்டது. இதையொட்டி கரூர் லைட்ஹவுஸ் கார்னர் பகுதியில் உள்ள முன்னாள் முதல்-அமைச்சர்கள் அண்ணா, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவ சிலைக்கு மாவட்ட அவைத்தலைவர் திருவிகா தலைமையில் அ.தி.மு.க.வினர் மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினர். தொடர்ந்து அ.தி.மு.க.வின் கொடியேற்றப்பட்டது. பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி, அ.தி.மு.க.வினர் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இணை செயலாளர் மல்லிகா சுப்பராயன், துணை செயலாளர் ஆலம் தங்கராஜ், கரூர் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் பசுவை சிவசாமி, கரூர் ஊராட்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் பாலமுருகன், மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் தானேஷ் என்கிற முத்துக்குமார், மாவட்ட மாணவர் அணி செயலாளர் சரவணன், கரூர் தெற்கு பகுதி செயலாளர் வி.சி.கே.ஜெயராஜ், தாந்தோணி கிழக்கு ஒன்றிய செயலாளர் வி.சி.கே.பாலகிருஷ்ணன், குளித்தலை மேற்கு ஒன்றிய செயலாளர் விநாயகம், க.பரமத்தி கிழக்கு ஒன்றிய செயலாளர் மார்க்கண்டேயன், தெற்கு ஒன்றிய செயலாளர் சேகர் என்கிற ஆனந்தராசு உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.