< Back
மாநில செய்திகள்
நாகப்பட்டினம்
மாநில செய்திகள்
அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா
|18 Oct 2023 12:15 AM IST
திருமருகலில் அ.தி.மு.க. 52-வது ஆண்டு தொடக்க விழா
திட்டச்சேரி:
அ.தி.மு.க.வின் 52-வது தொடக்க விழாவை முன்னிட்டு திருமருகல் மெயின் ரோட்டில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு கட்சியின் திருமருகல் வடக்கு ஒன்றிய செயலாளர் ராதாகிருட்டிணன் தலைமை தாங்கி கட்சி கொடியை ஏற்றி வைத்தார். பின்னர் மெயின் ரோட்டில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தி பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் அபுசாலிஹ், தெற்கு ஒன்றிய செயலாளர் பக்கிரிசாமி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அதேபோல் திட்டச்சேரியில் அவை தலைவர் மன்சூர்ஷா தலைமையிலும், நகர செயலாளர் அப்துல் பாசித் முன்னிலையிலும், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் முயினுதீன் கட்சியின் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.