< Back
மாநில செய்திகள்
மாநில செய்திகள்
குமரி அனந்தன் மருத்துவமனையில் அனுமதி
|8 Oct 2022 8:14 PM IST
தமிழக காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் குமரி அனந்தன் மூச்சு திணறல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை,
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், மூத்த தலைவருமான குமரி அனந்தன் (வயது 90) சென்னையில் வசித்து வருகிறார். அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு தனிவார்டில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.
டாக்டர்கள் குழுவினர், குமரி அனந்தனை 24 மணி நேரமும் தொடர்ச்சியாக கண்காணித்து, மருந்து, மாத்திரைகளை கொடுத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். உடல்நிலையில் ஏற்படும் முன்னேற்றத்தை பொறுத்து அவர் வீடு திரும்ப உள்ளார்.