< Back
மாநில செய்திகள்
இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை: 5-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

கோப்புப்படம்

மாநில செய்திகள்

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை: 5-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பம்

தினத்தந்தி
|
28 May 2023 12:14 AM IST

இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு மாணவர் சேர்க்கைக்கு 5-ந்தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் கீழ் இயங்கும் அனைத்து வகை ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களிலும் 2023-24-ம் கல்வி ஆண்டுக்கான 2 ஆண்டு இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்புக்கு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இந்தப்படிப்பில் சேர விரும்பும் மாணவ-மாணவிகள் அடுத்த மாதம் (ஜூன்) 5-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை https://scert.tnschools.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

அவ்வாறு விண்ணப்பிக்க இயலாத நிலையில் இருப்பவர்கள் தங்கள் இருப்பிடத்துக்கு அருகில் உள்ள ஏதேனும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பான மேலும் விவரங்களுக்கு https://scert.tnschools.gov.in என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்துகொள்ளலாம்.

மேலும் செய்திகள்