< Back
மாநில செய்திகள்
சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை: தரவரிசை பட்டியல் வெளியீடு

கோப்புப்படம்

மாநில செய்திகள்

சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கை: தரவரிசை பட்டியல் வெளியீடு

தினத்தந்தி
|
7 Jun 2024 1:03 AM IST

5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கான மாணவர் சேர்க்கையின் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் இணைவு பெற்ற சீர்மிகு சட்டப்பள்ளி மற்றும் பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக்கல்லூரிகளில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கான 2024-25-ம் கல்வியாண்டு மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு கடந்த மாதம்10-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெற்றது.

சீர்மிகு சட்டப்பள்ளியில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்பில் 624 இடங்கள் உள்ளன. அதற்கு, 7 ஆயிரத்து 42 விண்ணப்பங்கள் வந்தன. பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் சட்டக்கல்லூரிகளில் 2 ஆயிரத்து 43 இடங்கள் உள்ளன. இதற்கு, 16 ஆயிரத்து 984 விண்ணப்பங்கள் குவிந்தன.

இந்த நிலையில், 5 ஆண்டு ஒருங்கிணைந்த சட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கான தரவரிசை பட்டியலை தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப்பல்கலைக்கழகம் நேற்று வெளியிட்டது. மாணவர்கள் தங்கள் தரவரிசை மற்றும் கட் ஆப் மதிப்பெண் விவரங்களை www.tndalu.ac.in என்ற இணையதளத்தில் அறியலாம்.

மேலும் செய்திகள்